This is a list of english sentences with their tamil meaning.


Daily Use English Sentences With Tamil Meaning


Daily Use English Sentences With Tamil Meaning


நீங்க டீச்சரா?
Are you a teacher?

இது எப்படி நடந்துச்சுனே எனக்கு தெரியாது
I don't know how it happened

யாருமே என்னை புரிஞ்சிக்கல
Nobody understands me

உனக்கு வழி தெரியாதா?
Don't you know the route?

உன்மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு
I have complete faith in you

இது என்னோடது இல்ல
It is not mine

மூணு நாளா மழை பெய்ஞ்சுட்டு இருக்கு
It has been raining for three days

அவன் மொத்தமா மாறிட்டான்
He has completely changed

உனக்கு பிடிச்சிருந்தா எடுத்துக்க
Take it if you like

வெறும் கையோட போகாத
Don't go empty handed


உன் ஆஃபீஸ் எவ்வளவு தூரம்?
How far is your office?

உனக்கு எப்ப தெரிஞ்சிது?
When did you know that?

நான் ஒன்னும் முட்டாள் இல்ல
I am not a fool

கொஞ்சம் தண்ணீர் ஊத்து
Pour some water

எனக்கு அதப்பத்தி கவலை இல்ல
I don't care about it

நீ அத கொண்டுவர கூடாது
You shouldn't bring that

இந்த வாய்ப்ப தவற விட்டுடாத
Don't miss this opportunity

உனக்கு எவ்வளவு வேணுமோ நீ எடுத்துக்க
Take as much as you want

யாரும் எதுவும் சொல்லல
No one said anything

அவன் காரணமே இல்லாம என்னை திட்டினான்
He scolded me for no reason

எனக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்ல
I don't have any siblings

நாளைக்கு எனக்கு இன்டெர்வியூ இருக்கு
I have an interview tomorrow

இது எப்படி சாத்தியமாகும்?
How is it possible?

அவளை உள்ளே வர சொல்லு
Tell her to come in

இது உண்மை இல்ல
This is not true

அப்படி சொல்லாத
Don't say so

அவனை சமாதானப்படுத்து
Console him

உன்னைப்பத்தி எதாச்சும் சொல்லு
Say something about yourself

நீ அவன்கிட்ட என்ன சொன்ன?
What did you tell him?

மத்தவங்களை சார்ந்து இருக்காத
Don't depend on others

ஏன்னு சொல்றியா?
Can you tell me why?

நாளைக்கு உன் அப்பாவ கூட்டிட்டு வா
Bring your father tomorrow

அடுத்த பீரியட் என்ன?
What is the next period?

எனக்கு கொஞ்சம் உதவி வேணும்
I need some help

கதவை மூடி தாழ்பாள் போடு
Close the door and latch it

உனக்கு வர வர திமிரு ஏறிட்டே போகுது
You are growing arrogant

பேராசைப்படாத
Don't be greedy

உனக்கு புரியலைன்னா என்கிட்ட கேளு
Ask me if you don't understand

அவனை பார்க்கவே பாவமா இருக்கு
He looks pitiful

என் பொறுமையை சோதிக்காத
Don't try my patience

அவனை ஒத்துக்க வைக்கலாம்
Let's make him agree

வேற எதாச்சும் சொல்லனுமா?
Anything else to say?

என்னால இப்ப இத பண்ண முடியாது
I can't do it now

இப்ப மணி எத்தனை?
What time is it now?

நீ எதுக்குமே லாயக்கு இல்ல
You are fit for nothing

நான் ஞாயிற்றுகிழமை வருவேன்
I will come on Sunday

பைக் சாவி எங்க?
Where is the bike key?

நான் இங்க நேத்து தான் வந்தேன்
I came here yesterday

நீ இப்ப போகணும்
You should go now

குழந்தை மாதிரி அழுவாத
Don't cry like a child

எனக்கு அவனை ரொம்ப நல்லா தெரியும்
I know him very well

அவள் உனக்கு யாரு?
Who is she to you?

ஒரு தடவையாச்சும் பேசு
Talk at least once

நான் சைவம்
I am a vegetarian